விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலத்தை புறக்கணிக்கும் பாதசாரிகள்

விழுப்புரம் ரயில் நிலைத்தை கடந்து செல்ல நடைமேம்பாலம் இருந்தும், அதனை பயன்படுத்தாமல், தண்டவாளத்தை கடந்து செல்லும் பாதசாரிகளை

விழுப்புரம் ரயில் நிலைத்தை கடந்து செல்ல நடைமேம்பாலம் இருந்தும், அதனை பயன்படுத்தாமல், தண்டவாளத்தை கடந்து செல்லும் பாதசாரிகளை போலீஸார் முறைப்படுத்தி அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
 விழுப்புரம் ரயில்வே மேம்பால சீரமைப்புப் பணி காரணமாக, அந்த சாலையில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பாதசாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாற்றுப் பாதைகளில் வாகனங்கள் சென்று வருகின்றன. இருப்பினும், பாலத்தின் இரு புறங்களிலும் உள்ள பொதுமக்கள் மறுபுறத்திற்குச் செல்வது பெரும் சிரமமாக உள்ளது.
 இருப்பினும், ரயில்நிலையப் பகுதியில் நடைமேம்பாலத்தை பயன்படுத்தி பொதுமக்கள் இருபுறங்களிலும் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோன்று, ரயில் நிலையப் பகுதியில் பைக்குகள் செல்ல பாதை திறந்து விட்டப்பட்டுள்ளது. அந்த பாதையை பயன்படுத்தி காலை 8 முதல் 11 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் பைக்குகளை தள்ளிக்கொண்டு செல்ல போலீஸார் அனுமதிக்கின்றனர்.
 ஆனால், நடந்து செல்லும் பாதசாரிகள், பைக்குகள் அனுமதிக்கப்படும் பாதையை பயன்படுத்தி ரயில் தண்டவாளங்களை கடந்து செல்வதால், பைக்குகளை தள்ளிக்கொண்டு செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், கூட்டமாக ஒரே நேரத்தில் தண்டவாளத்தைக் கடந்து செல்வதும் தொடர்கிறது. இதனால், ரயில்நிலைய நடைமேம்பாலம் எப்போதும் வெறிச்சோடிக் காணப்படுகிறது. போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருந்தாலும் பொதுமக்கள் அதனை பொருள்படுத்தாமல் தங்களின் விருப்பதிற்கு ஏற்ப தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர். ஆகையால், இதனைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பான முறையில் பொதுமக்கள் இருபுறங்களிலும் சென்று வர நடைமேம்பாலத்தை மட்டுமே பயன்படுத்துவதை போலீஸார் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com