இலவச செல்லிடப்பேசி பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு

விழுப்புரம் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் இலவச செல்லிடப் பேசி பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விழுப்புரம் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் இலவச செல்லிடப் பேசி பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 விழுப்புரத்தில், மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை வழிகாட்டுதலில் இயங்கும் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் இலவச சுயதொழில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில், 2,500-க்கும் மேற்பட்டோர் தொழில் பயிற்சி பெற்றுள்ளனர்.
 அதில், 1,500-க்கும் மேற்பட்டோர் சுயமாக தொழில் தொடங்கி தொழில் முனைவோராக உள்ளனர்.
 இப்பயிற்சி மையத்தின் சார்பில், செல்லிடப் பேசி பயிற்சி ஜூலை முதல் தொடங்குகிறது. பயிற்சி பெற விரும்புவோர், இம்மையத்தில் விண்ணப்பங்களைப் பெற்று வருகிற ஜூன் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
 விண்ணப்பங்களை இயக்குநர், இந்திய வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், அலமேலுபுரம், மாம்பழப்பட்டுச் சாலை, விழுப்புரம். தொலைபேசி: 04146-227115 என்ற முகவரியில் பெறலாம்.
 எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேரலாம். பயிற்சியின் போது, மதிய உணவு வழங்கப்படும். பயிற்சி வகுப்புகள் காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் என்று நிறுவன இயக்குநர் பிலோமினாள் சங்கீதா தெரிவித்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com