மதுக் கடைகளை எதிர்த்து போராட்டத்தில் இறங்கிய பெண்கள்: இரு இடங்களில் சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, கள்ளக்குறிச்சியில் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, கள்ளக்குறிச்சியில் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 செஞ்சி அருகே நாட்டார்மங்கலத்திலிருந்து மொடையூருக்குச் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்தக் கடையை அகற்றக் கோரி, நாட்டார்மங்கலம் மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், திங்கள்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியில் ஈடுபட்டனர்.
 அப்போது அவர்கள் கூறியது: ஊரின் மையப் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளதால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர். பெண்கள் இவ்வழியே நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
 கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு பல முறை மனு அளித்தும் பயன் இல்லை. இனியும் தாமதிக்காமல் டாஸ்மாக் கடை அகற்றப்பட வேண்டும் என்றனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் செஞ்சி காவல் உதவி ஆய்வாளர் அசோகன் பேச்சுவார்த்தை நடத்தி, டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. மறியலால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 கள்ளக்குறிச்சியில்...
 கள்ளக்குறிச்சி வ.உ.சி. நகர் 7ஆவது குறுக்குத் தெருவில், டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பெண்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி நகரில், நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகள், நகர்ப்புறத்தில் உள்ள சில டாஸ்மாக் கடைகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் அகற்றப்பட்டன. அந்தக் கடைகளை மாற்று இடத்தில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
 அந்த வகையில், இப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைய உள்ளதாக அறிந்த பெண்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் மு.பாண்டியன் தலைமையிலான போலீஸார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. மறியலால் கள்ளக்குறிச்சி-கச்சிராயப்பாளையம் சாலையில் சுமார் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com