திருக்கோவிலூரை வந்தடைந்தது சாத்தனூர் அணை தண்ணீர்

விழுப்புரம் மாவட்டத்தில் நிலத்தடி நீரை உயர்த்தும் விதத்தில் சாத்தனூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் திருக்கோவிலூர் பகுதிக்கு சனிக்கிழமை வந்து சேர்ந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் நிலத்தடி நீரை உயர்த்தும் விதத்தில் சாத்தனூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் திருக்கோவிலூர் பகுதிக்கு சனிக்கிழமை வந்து சேர்ந்தது.
விழுப்புரம் மாவட்டத்தின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில், திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து, பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்துவிட அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.
இதன்படி, அரசு உத்தரவின் பேரில், சாத்தனூர் அணையிலிருந்து மார்ச் 23-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
வியாழக்கிழமை 65 மில்லியன் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.
இதனையடுத்து, தென்பெண்ணை ஆறு வழியாக இந்த நீர் விழுப்புரம் மாவட்டம், மணலூர்பேட்டை பகுதிக்கு சனிக்கிழமை காலை வந்து சேர்ந்தது. வறண்டு கிடந்த ஆற்றில் திடீரென தண்ணீர் வந்ததால் மக்கள் வியப்படைந்தனர். சிறுவர்கள் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இந்த நீர் சனிக்கிழமை இரவு திருக்கோவிலூர் வந்தடைந்தது. தொடர்ந்து, மார்ச் 28-ஆம் தேதி வரை ஐந்து நாள்களுக்கு 306.72 மில்லியன் கன அடி நீர் திறந்துவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆறு பாயும் பகுதிகளில் நிலத்தடி நீராதாரம் உயரும் என்று விவசாயிகளும், பொது மக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com