திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் இடிந்து விழுந்த நீதிமன்ற வளாகச் சுவர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கடந்த மாதம் திறக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கடந்த மாதம் திறக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் சுற்றுச் சுவர், காற்றுடன் பெய்த மழையால் இடிந்து விழுந்தது.
 திண்டிவனத்தை அடுத்த தென்பசியார் பகுதியில் ரூ.19 கோடி மதிப்பில் கட்டப்பட்ட திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திறக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
 இந்த நிலையில், புதன்கிழமை நள்ளிரவு தென்பசியார் பகுதியில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த சுவரின் ஒரு பகுதி மழையால் நனைந்து இடிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. நிகழ்விடத்துக்கு பொதுப்பணித் துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். சுற்றுச்சுவரை புதிதாக கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com