அறையில் குழி தோண்டி பதுக்கிய எரிசாராயம் பறிமுதல்: எஸ்பி ஆய்வு

திண்டிவனத்தை அடுத்த முட்டியூரில் வீட்டின் அருகே  அறைக்குள் குழி தோண்டி அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை கேன்களுடன் தனிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை

திண்டிவனத்தை அடுத்த முட்டியூரில் வீட்டின் அருகே  அறைக்குள் குழி தோண்டி அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை கேன்களுடன் தனிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை
பறிமுதல் செய்தனர்.
முட்டியூர் பகுதியில் முத்துலட்சுமி என்பவருக்குச் சொந்தமான வீட்டின் அருகே தரையில் குழி தோண்டி அதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 57 எரி சாராய கேன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
இது குறித்து திண்டிவனம் தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், எரிசாராய கேன்களை பறிமுதல் செய்ததுடன், இதுதொடர்பாக சலவாதி கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் பழனியை (33) கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயகுமார், மாவட்ட மதுவிலக்கு ஏடிஎஸ்பி டி.ராஜராஜன் நிகழ்விடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராய கேன்கள் திண்டிவனம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
மதுவிலக்கு போலீஸார் வழக்குப் பதிந்து, இதுதொடர்பாக மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com