சாலைப் பணியாளர்கள் நூதனப் போராட்டம்

விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் தலையில் முக்காடு அணிந்தும் ஒப்பாரி

விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் தலையில் முக்காடு அணிந்தும் ஒப்பாரி வைத்தும் வெள்ளிக்கிழமை மாலை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு கோட்டத் தலைவர்கள் கள்ளக்குறிச்சி பி.லாரன்ஸ், பெரம்பலூர் பி.முத்து, அரியலூர் பி.காமராஜ், கடலூர் ஜி.ஜோசப், ஜி.குமார் வேலூர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைத் தலைவர் பி.கோதண்டபாணி தலைமை வகித்துப் பேசினார். கோட்டச் செயலர்கள் முத்து, சிவக்குமார், சுப்பிரமணியன், செந்தில்குமரன், ஜெயவேல் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் கே.மகாலிங்கம், பொருளாளர் ரவி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். மாநிலச் செயலர் வி.கணேசன் நிறைவுரையாற்றினார்.
சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி பணப்பலன் வழங்க வேண்டும். பணிநீக்க காலத்தில் இறந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்புப் பணியை தமிழக அரசு தனியாரிடம் விடும் முடிவைக் கைவிட வேண்டும். சாலைப் பணியாளர்கள் மாத ஊதியத்தை நிரந்தர ஊதிய தொகுப்பிலிருந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com