நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

ஹோலி ஏஞ்சல் பள்ளி
இரட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக். பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளது.
பள்ளியில் தேர்வெழுதிய 93 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
மாணவிகள் ஐஸ்வரியா, ஞானதேசிகா தலா 491 மதிப்பெண்களும், ஏனோஸ் மற்றும் பிரபாவதி ஆகிய இருவரும் தலா 483 மதிப்பெண்களும், மாணவி திலகவதி 481 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 4 மாணவர்கள் 100 மதிப்பெண்களும், கணிதப் பாடத்தில் ஒரு மாணவர் 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.  மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகி பழனியப்பன், முதல்வர் அகிலா, நிர்வாக அலுவலர் ரவி, விஜயலட்சுமி ஆகியோர் பாராட்டினர்.

எஸ்.எஸ்.வி. பள்ளி
உளுந்தூர்பேட்டை அருகே சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய 127 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.
கே.விசாகன் 494 மதிப்பெண்களும் பி.பத்ரிநாராயணன் 491 மதிப்பெண்களும் கே.மங்கையர்க்கரசி, ஜெ.திலகவதி 490 மதிப்பெண்களும் பெற்றனர். சமூக அறிவியல் பாடத்தில் 31 பேரும் அறிவியல் பாடத்தில் 11 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர். 450 மதிப்பெண்களுக்கு மேல் 51 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 84 பேரும் பெற்றனர். மாணவ, மாணவிகளை ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் தட்சணாமூர்த்தி, ஜி.சாந்தி, பள்ளி முதல்வர் பி.கந்தசாமி மற்றும் ஆசிரியர்கள் இனிப்புகள் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com