கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கொதி கலன் சோதனை ஓட்டம்

விழுப்புரம் மாவட்டம், பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கூட்டு மின் உற்பத்தித் திட்டத்தின் கீழ்

விழுப்புரம் மாவட்டம், பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கூட்டு மின் உற்பத்தித் திட்டத்தின் கீழ் கொதிகலன் சோதனை ஓட்டம் மற்றும் இளஞ்சூடேற்று நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநில சர்க்கரை இணைய தலைவர் கே.ஜி.பி.ஞானமூர்த்தி தலைமை வகித்தார். ஆலையின் துணைத் தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். ஆலையின் கூட்டு மின்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் கலந்துகொண்டு, நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
பின்னர், அவர் விவசாயிகளிடம் பேசுகையில், பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ.135 கோடியே 20 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 18 மெகாவாட் உற்பத்தி செய்யும் கூட்டு இணைமின் உற்பத்தி நிலையம் மற்றும் நவீனமயமாக்கப்பட்ட புதிய கரும்பு ஆலையை இந்த ஆண்டு இயக்கும் நோக்கில் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன
என்றார்.
நிகழ்ச்சியில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பழனிசாமி, தணிகாசலம், பார்வதி ஏழுமலை, பழனியம்மாள் சண்முகம் உள்பட பலர்
கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com