1,727 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி

தியாகதுருகம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 1727 மடிக்கணினிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

தியாகதுருகம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 1727 மடிக்கணினிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் க.காமராஜ் எம்.பி., அ.பிரபு எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்று மடிக்கணினிகளை வழங்கினர்.
தியாகதுருகம் அரசு ஆண்கள், பெண்கள் மற்றும் நாகலூர், விருகாவூர், கூத்தக்குடி, ஒகையூர், அசகளத்தூர் உள்ளிட்ட  அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ. 2 கோடியே 14 லட்சத்து 14 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் 1,727 விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
 நிகழ்ச்சிக்கு தியாகதுருகம் அரசு ஆண்கள், பெண்கள் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவருமான வி.அய்யப்பா தலைமை வகித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ கோமுகி மணியன், விருகாவூர்  பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.ஜான்பாஷா, நாகலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி  முன்னிலை வகித்தார்.
தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகலா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக க.காமராஜ் எம்.பி. பங்கேற்றார். விழாவில் அ.பிரபு எம்எல்ஏ பேசுகையில்,  மறைந்த முன்னாள் முதல்வர் மாணவர்களின் கல்வியில் அக்கறை கொண்டு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். மற்ற மாநிலங்களில்  சில ஆண்டுகளே வழங்கினர். அவர்களால் தொடர்ந்து வழங்க முடியவில்லை. நம் மாநிலத்தில் மடிக்கணினி திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது என்றார்.  நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி, தியாகதுருகம் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் தமிழரசி குமரேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com