கபிலர் முத்தமிழ்ச் சங்க ஐம்பெரும் விழா

திருக்கோவிலூரில் கபிலர் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருக்கோவிலூரில் கபிலர் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இலக்கியப் பயிலரங்கம், இசையரங்கம், கவியரங்கம், பாராட்டரங்கம், எழுத்தாளர் குரல் பயிலரங்கம் ஆகியவை ஐம்பெரும் விழாவாக நடத்தப்பட்டன.
 விழாவுக்கு, சங்கத் தலைவர் விளந்தை அ.சண்முகம் தலைமை வகித்தார். தியாகதுருகம் தமிழ்ச் சங்கத் தலைவர் கோ.இராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சங்கச் செயலர் எம்.இராதாகிருஷ்ணன் வரவேற்றார்.
 இலக்கிய பயிலரங்கில், மரபுக் கவிதைகள் எழுத  பாவரசு பாரதிசுகுமாரனும், புதுக் கவிதைகள் எழுத கவிஞர் கோவி.ஆறுமுகமும் பயிற்சி அளித்தனர்.    படைப்பாளர்கள் குரல் பயிலரங்கத்தில், எழுத்தாளர்கள் ஜோதிநரசிம்மன், கு.கார்க்கி ஆகியோர் பேசினர்.
 புலவர் பெண்ணைவளவன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில்,   செ.சு.மலரடியான்,  தங்க.விஸ்வநாதன்,  நல்ல.பன்னீர்செல்வம்,  தி.க.நாகராஜன்,  பெ.நாகராஜன்,  ஆர்.தியாகராஜன்,  சு.பச்சையம்மாள்  ஆகியோர்  கவிதை  வாசித்தனர்.
 திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வாசவி உதவிபெறும் நடுநிலைப் பள்ளி, சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகியவற்றுக்கு தமிழன்னை உருவப்படம் பரிசாக வழங்கப்பட்டது.    முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோமுகிமணியன் தலைமையில் நடைபெற்ற பாராட்டரங்கில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் ஏ.வி.சரவணன், அரகண்டநல்லூர் தமிழ்ச் சங்கத் தலைவர் தேவ.சுந்தரவடிவேல், நல்லாசிரியர் கு.நெடுஞ்செழியன், முனைவர் என்.இராதாகிருஷ்ணன், விளந்தை முன்னாள் ஊராட்சித் தலைவர் எம்.இராஜகோபால் ஆகியோர் பேசினர்.
 இசையரங்கில்,  வேட்டவலம் அ.டேவிட், எம்.கே.மூர்த்தி, சோபியா மேரி  கியோர் சமுதாய விழிப்புணர்வுப் பாடல்கள் பாடினர்.   திருவண்ணாமலை புலவர் கோவிந்தசாமி, தமிழறிஞர் சுப்பிரமணி, அம்பி.சுப்பிரமணி, அனைத்து விவசாயிகள் சங்க மாவட்ட அமைப்பாளர் எல்.ஜி.செந்தில் உள்பட பலர் கலந்துகொண்டனர். சங்கப் பொருளாளர் விஜய.பரஞ்ஜோதி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com