கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் பேரணி, ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி கோட்டை மேடு பகுதியில் இருந்து கரும்புகளை கையில் ஏந்தி பேரணியாக புறப்பட்ட தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் காந்தி சிலை வழியாகச் சென்று மந்தைவெளித் திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் கோமுகி கூட்டுறவு சர்க்கரைஆலை சங்கத் தலைவர் ஆர்.குருநாதன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி, மாநில பொருளாளர் எம்.சின்னப்பா, மாநிலக்குழு ஏ.வி.நாராயணப்பிள்ளை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியை மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் தொடக்கி வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான கே.பாலகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், 2017-18-ஆம் ஆண்டுக்கான கரும்புக்கு மாநில அரசு பரிந்துரை விலையை அறிவிக்க வேண்டும், ரங்கராஜன் கமிட்டி பரிந்துரையான பங்கீட்டு முறையை ஏற்க முடியாது, கூட்டுறவு ஆலைகளில் உள்ள கூட்டு மின் உற்பத்தித் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்,  விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், கூட்டுறவு ஆலைகளை பாதுகாத்திட அனைத்து கூட்டுறவு மற்றும் தனியார் ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித்தொகை  ரூ.1900 கோடியை வழங்க வேண்டும்.
இந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்துள்ள கூடுதல் விலை ரூ.250 சேர்த்து ரூ.3 ஆயிரமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில்  கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1-இன் தலைவர் ஜி.சேதுராமன், செஞ்சி ராஜஸ்ரீ ஆலையின் தலைவர் டி.ஆர்.குண்டு ரெட்டியார், செங்கல்ராயன் ஆலையின் செயலாளர் எஸ்.ஜோதிராமன், முண்டியம்பாக்கம் ராஜஸ்ரீ ஆலை டி.ஏழுமலை, திருக்கோவிலூர் பண்ணாரி ஆலைத் தலைவர் சி.மதியழகன், கலையநல்லூர் தரணி ஆலைத் தலைவர் ஆர்.ராஜேந்திரன், பெரம்பலூர் ஆலையின் மாநிலச் செயலாளர் எ.கே.ராஜேந்திரன், திருவண்ணாமலை பண்ணாரி ஆலையின் தலைவர் எஸ்.பலராமன், போளூர் தரணி ஆலைத் செயலாளர் கே.பாலமுருகன் உள்பட சங்க உறுப்பினர்கள், விவசாயிகள் பலர் பங்கேற்றனர். எம்.முகமது அலி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com