விழுப்புரம் நீதிமன்றத்தில் மருத்துவ முகாம்

விழுப்புரம் நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த மருத்துவ முகாமை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சரோஜினி தேவி தொடக்கி வைத்தார்.  மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலர் உமாமகேஸ்வரி வரவேற்றார்.  
 நிகழ்ச்சியில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜூலியட் புஷ்பா, கூடுதல் மாவட்ட நீதிபதி சாருஹாசினி, சார்பு நீதிபதி(1) மோனிகா, கூடுதல் சார்பு நீதிபதி(2) மோகன், மோட்டார் வாகன விபத்து சிறப்பு நீதிபதி உத்தமராஜ், குற்றவியல் நீதித்துறை நடுவர்(1) மும்தாஜ், மருத்துவக் கல்லூரி இயக்குநர் வெங்கடாஜலபதி, வழக்குரைஞர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முகாமில், கண் பரிசோதனை, இ.சி.ஜி., எக்கோ பரிசோதனைஉள்ளிட்டவை தொடர்பாக மருத்துவர் பத்ரிநாத், செவிலியர்அஜித்தா தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.  முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். தொடர்ந்து, திங்கள்கிழமை மாலை வளவனூரில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் பெண், குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com