அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் அமைப்பு தின கொடியேற்று விழா

விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் 37-வது அமைப்பு தின விழாவை சங்கத்தினர் பல்வேறு இடங்களில் கொடியேற்றி கொண்டாடினர்.

விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் 37-வது அமைப்பு தின விழாவை சங்கத்தினர் பல்வேறு இடங்களில் கொடியேற்றி கொண்டாடினர்.
 தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்காக கடந்த 14.11.1981-இல் அரசுப் பணியாளர் சங்கம் தொடங்கப்பட்டது. சங்கத்தின் 37-வது அமைப்பு தினத்தை செவ்வாய்க்கிழமை கொண்டாடினர்.
 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கொடியேற்று விழாவுக்கு அடிப்படை பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் வி.உமாகாந்தி தலைமை வகித்தார்.
 எம்.ஜெயக்குமார், எஸ்.முரளி, மாவட்டச் செயலர் கே.சீனுவாசன் முன்னிலை வகித்தனர். ஜாஸ்மின்ஸ் சங்க மாநிலத் தலைவர் எம்.ஆர்.சிங்காரம் சங்கக் கொடியேற்றி வைத்துப் பேசினார். மாநில துணைப் பொதுச் செயலர் சி.அருணகிரி, மாவட்டப் பொருளாளர் என்.செந்தில் வாழ்த்திப் பேசினர்.
 விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், ஜாஸ்மின்ஸ் மாவட்டத் தலைவர் டி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பி.இளங்கோவன், அமைப்புச் செயலர் ஆர்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 அரசுப் பணியாளர் சங்க மாநில பிரசார செயலர் என்.சுந்தர்ராஜா, மாநில துணைப் பொதுச் செயலர் பி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
 விழுப்புரம் நெடுஞ்சாலை உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் சாலைப் பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.கருணாகரன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பி.குமரவேல் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். சத்துணவுப் பணியாளர் சங்கம் ஜி.புருஷோத்தமன், குணசேகரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
 விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்டத் தலைவர் கே.ஜெயக்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் பி.தென்னரசு, டி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
 மத்திய செயற்குழு உறுப்பினர் எஸ்.சிவகுரு கொடியேற்றி வைத்துப் பேசினார். ஊரக வளர்ச்சிப் பணியாளர் சங்க மாநில கௌரவத் தலைவர் கே.ஜெயச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சங்க பொதுச் செயலர் ஜெ.மூர்த்தி, தலைமை நிலைய செயலர் ஆர்.நடராஜன், காவல் துறை அமைச்சுப் பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.விஜயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
 நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட துணைத் தலைவர் ஏ.முருகன் தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர்கள் பாலு, சோமசுந்தரம், பாலாஜி முன்னிலை வகித்தனர். அரசுப் பணியாளர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் கே.முருகன் கொடியேற்றி வைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com