கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு

இந்திலி டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை, அறிவியல் கல்லூரியில் டெங்கு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்திலி டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை, அறிவியல் கல்லூரியில் டெங்கு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 கருத்தரங்கிற்கு கல்லூரித் தலைவர் க.மகுடமுடி தலைமை வகித்தார். தாளாளர் ஜி.எஸ்.குமார், செயலாளர் தி.கோவிந்தராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் கு.மோகனசுந்தர் வரவேற்றார்.
 மேலூர் வட்டார மருத்துவ அலுவலர் த.பங்கஜம் பங்கேற்று ஏ.டிஸ் கொசு பற்றியும், அதனால் ஏற்படும் உயிர் இழப்புகள், அதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார்.
 மருத்துவ அலுவலர் பாலாஜி, வட்டார மருத்துவ அலுவலர்கள் சுகன்யா (மேலூர்), வெற்றிவேல் (ரிஷிவந்தியம்), சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகாலிங்கம், சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 கருத்தரங்கில் ஆர்.கே.சண்முகம் கலை, அறிவியல் கல்லூரி, ஆர்.கே.எஸ். பாரா மெடிக்கல் இன்ஸ்டியூட் மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கல்லூரி மாணவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கினர்.
 முன்னதாக, டெங்கு ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முடிவில் துணை முதல்வர் பெ.ஜான்விக்டர் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com