விழுப்புரம் எல்லீஸ் தடுப்பணைக்கு வந்தது சாத்தனூர் அணை நீர்

சாத்தனூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் செல்கிறது.

சாத்தனூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் செல்கிறது. இந்த நீர் விழுப்புரம் அருகேயுள்ள எல்லீஸ் தடுப்பணைப் பகுதியை வியாழக்கிழமை கடந்து தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்துச் சென்றது.
 விழுப்புரம் வழியாகச் செல்லும் தென்பெண்ணை ஆற்றில் நீண்ட காலமாக தண்ணீர் வரத்தின்றி ஆறு வறண்டு காணப்பட்டது. பிடாகம், மரகதபுரம், பேரங்கியூர் பகுதிகளில் குவாரி அமைத்து 20 முதல் 30 அடி ஆழம் வரை மணல் அள்ளப்பட்டு மண்தரையாகிப் போனதால், முள்புதர்கள் முளைத்து காட்சியளிக்கிறது. இதனால், விழுப்புரம் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கடந்த 2 ஆண்டுகளாக வறட்சி நிலவுகிறது. இதனால், விவசாயிகள் தென்பெண்ணை ஆற்று நீரை எதிர்நோக்கியுள்ளனர்.
 திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சாத்தனூர் அணை செவ்வாய்க்கிழமை மாலை நிரம்பியது. அணையின் நீர்மட்ம் 117 அடியை எட்டியதால், அணையிலிருந்து விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மழை நீருடன் அணை நீரும் சேர்ந்ததையடுத்து, தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வேகமாக வந்துகொண்டிருந்தது.
 திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றை புதன்கிழமை கடந்த தண்ணீர், வியாழக்கிழமை காலை விழுப்புரம் அருகே உள்ள எல்லீஸ் தடுப்பணைக்கு வந்தடைந்தது.
 வியாழக்கிழமை மாலை பிடாகம் நெடுஞ்சாலைப் பாலப் பகுதி தென்பெண்ணையாற்றை தண்ணீர் கடந்தது.
 15 ஆண்டுகளுக்குப் பிறகு விழுப்புரம் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் ஓடுவதைக் கண்டு விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
 எல்லீஸ் தடுப்பணை வழியாக பாய்ந்தோடும் தண்ணீரில் இளைஞர்கள், சிறுவர்கள் குளித்து மகிழ்ந்தனர்.
 தண்ணீரை தடை செய்யக் கூடாது: விழுப்புரம் பகுதியில் ஏற்கெனவே மணல் குவாரி இருந்ததால், இடையே சில முறை வழங்கப்பட்ட சாத்தனூர் அணை நீரையும், திருக்கோவிலூர் அணைக்கட்டுப் பகுதியிலேயே திருப்பிவிட்டனர். சித்தாத்தூர் பகுதியில் தற்போது மணல் குவாரி தொடங்கப்பட்டுள்ளதால், அணை நீரை திருப்பி விடவோ, நிறுத்தவோ கூடாதென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
 விழுப்புரம் பகுதியில் 100 அடிக்கு கீழே நிலத்தடி நீர்மட்டம் சென்றுவிட்டதால், நிலத்தடி நீராதாரம் உயர தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் செல்வது அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com