கிராம சுகாதார செவிலியர்களுக்கான காசநோய் பயிற்சி முகாம்

விழுப்புரத்தில் கிராம சுகாதார செவிலியர்களுக்கான காசநோய் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரத்தில் கிராம சுகாதார செவிலியர்
களுக்கான காசநோய் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காச நோய் மையம் சார்பில் கிராம சுகாதார சேவிலியர்களுக்கு காச நோய் தடுப்பு நடைமுறைகள் குறித்து விளக்கும் வகையில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. மாவட்ட காச நோய் துணை இயக்குநர் சுதாகர் கலந்து கொண்டு, சுகாதார செவிலியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், காசநோய் தடுப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சசிக்குமார், வெங்கடாசலம், ரகு ஆகியோர் கலந்து கொண்டு புதிய நடைமுறைகளை விளக்கினர்.
கிராமப்புறங்களில் காச நோயாளர்களை எப்படி கண்டறிவது, நாள்பட்ட சளி இருப்பவர்களை காசநோய் பரிசோதனை செய்ய அறிவுறுத்த வேண்டும், காச நோயாளிகளை தொடர்ந்து மாத்திரை சாப்பிட ஏற்பாடு செய்தல் போன்றவை குறித்து விளக்கப்பட்டன.
பயிற்சி முகாமில் விழுப்புரம் சுகாதார மாவட்டத்துக்கு உள்பட்ட 11 ஒன்றியங்களில் இருந்து சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com