வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்குப் பயிற்சி

திண்டிவனம் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

திண்டிவனம் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு வட்டாட்சியர் கீதா, தேர்தல் துணை வட்டாட்சியர் பழனி, மண்டல துணை வட்டாட்சியர் நாராயணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திண்டிவனம் சார்-ஆட்சியர் பிரபுசங்கர் தலைமை வகித்துப் பேசியதாவது:
வரும் 2018, ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்த அனைவரையும் சிறப்பு சுருக்க திருத்தப் பணியின் போது வாக்காளர் பட்டியலில் சேர்த்திட
வேண்டும்.
மேலும், வரும் அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது எனவும், அன்றைய தேதியில் இருந்து அம்மாதம் 31-ஆம் தேதி வரை வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் பணியில் இருந்து பொதுமக்களிடமிருந்து 6, 7, 8, 8ஏ படிவங்களை பெற வேண்டும் என்றும், பெறப்பட்ட படிவங்கள் மீது டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுத்து முடிக்கப்பட வேண்டும் என்றும், வாக்காளர் துணைப் பட்டியல் தயாரித்து அச்சிடுதல் பணி டிசம்பர் 11-ஆம் தேதி முதல் 2018 ஜனவரி 3-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, ஜனவரி 5-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com