ஏழை மாணவிகளுக்கு செல்லிடப்பேசி பழுது நீக்கும் பயிற்சி

பெற்றோர்களை இழந்த மற்றும் ஏழை மாணவிகள் சொந்தமாக தொழில் தொடங்கும் வகையில், அவர்களுக்கு கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் கணினிப் பயிற்சி, செல்லிடப்பேசி பழுது நீக்கும்

பெற்றோர்களை இழந்த மற்றும் ஏழை மாணவிகள் சொந்தமாக தொழில் தொடங்கும் வகையில், அவர்களுக்கு கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் கணினிப் பயிற்சி, செல்லிடப்பேசி பழுது நீக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் நலன் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பி.எஸ்.என்.எல். இணைந்து இந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. கடந்த 21-ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயிற்சி தொடர்ந்து 30 நாள்களுக்கு நடைபெற உள்ளது.
இந்தப் பயிற்சி முகாம் தொடக்க விழாவுக்கு கள்ளக்குறிச்சி பி.எஸ்.என்.எல். கோட்டப் பொறியாளர் சுகந்தி தலைமை வகித்தார். பி.எஸ்.என்.எல். உள் கோட்டப் பொறியாளர்கள் ராஜவேல், காந்தி, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் டயானா ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சீதா வரவேற்றார்.
கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அ.கல்யாணசுந்தரம், ப.இராஜவேல் ஆகியோர் முகாமைத் தொடக்கி வைத்தனர்.
இந்தப் பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு ஊக்கப்படியாக நாள்தோறும் ரூ.140 வழங்கப்படுவதாகவும், பயிற்சியின் கடைசி நாளன்று சான்றிதழ் வழங்கப்படும் என்றும், இந்தச் சான்றிதழை பயன்படுத்தி வங்கிகளில் தொழில் கடன் பெற்று சுய தொழில் தொடங்கலாம் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அ.கல்யாணசுந்தரம் தெரிவித்தார். பி.எஸ்.என்.எல். இளநிலை பொறியாளர் சாந்தி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com