சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் போராட்ட ஆயத்தக் கூட்டம் 

தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் போராட்ட ஆயத்தக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் போராட்ட ஆயத்தக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 சுகாதார ஆய்வாளர் காலிப் பணியிடங்களை நிரப்புதல், நீண்ட காலமாக பதவி உயர்வு வழங்கப்படாத, ஓய்வு பெறும் நிலையில் உள்ள 246 சுகாதார ஆய்வாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். சுகாதார ஆய்வாளரை ஆய்வக தொழில் நுட்ப பணியை கூடுதலாக பார்க்க சொல்வதைத் தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் வரும் 20-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு ஆயத்தமாவது குறித்து மாவட்ட அளவிலான ஆயத்தக் கூட்டம் விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுரு தலைமை வகித்தார். வட்டார மேற்பார்வையாளர் வீரப்பன், சுகாதார ஆய்வாளர்கள் சிவபாலன், பாபு, உதயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா வரவேற்றார்.
 தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் மூர்த்தி, தமிழக சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் அருணகிரி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சஙக மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் நல சங்க மாநிலத் தலைவர் கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து திரளானோர் கலந்து கொள்ள வேண்டும். அரசு தங்களது கோரிக்கையை ஏற்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com