வள்ளலார் கோயில் விழா 

செஞ்சிக்கோட்டை மலையடிவாரம் முல்லை நகரில் அமைந்துள்ள திருஅருட்பிரகாச வள்ளலார் கோயில் நான்காம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

செஞ்சிக்கோட்டை மலையடிவாரம் முல்லை நகரில் அமைந்துள்ள திருஅருட்பிரகாச வள்ளலார் கோயில் நான்காம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 அன்று காலை 6 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், 7.45 மணிக்கு ஜோதி வழிபாடு நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து சன்மார்க்கக் கொடி உயர்த்தப்பட்டது. காலை 8 மணிக்கு வள்ளலார் வீதியுலா நடைபெற்றது. காலை 11 மணிமுதல் 12 மணி வரை பரம்பரை வைத்தியர் திண்டுக்கல் கே.முத்துகிருஷ்ணன் தலைமையில் இலவச சித்தர் கலிக்கம்
 (கண்) மருத்துவ முகாம் நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு அறுசுவை உணவு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பிற்பகல் ஒரு மணிக்கு ஸ்ரீசத்தியசேவா சமிதியினரின் சர்வ மத பஜனை நடைபெற்றது.
 விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சர்தார் சிங், முல்லை நகர் பொது மக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com