உளுந்தூர்பேட்டை, செஞ்சியில் விவசாயிகள் சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த இரு நாள்களாக பணம் பட்டுவாடா செய்யப்படாததைக் கண்டித்து, விவசாயிகள் புதன்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். 

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த இரு நாள்களாக பணம் பட்டுவாடா செய்யப்படாததைக் கண்டித்து, விவசாயிகள் புதன்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு, உளுந்தூர்பேட்டையை சுற்றியுள்ள பு.மாம்பாக்கம், நகர், நயினாக்குப்பம், செங்குறிச்சி, பாண்டூர், வெள்ளையூர், எ.குமாரமங்கலம் உட்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள் உளுந்து, நெல், எள் உள்ளிட்ட தானியப் பொருள்களை விற்பனை செய்ய புதன்கிழமை கொண்டு வந்திருந்தனர்.
 ஆனால், அவர்களுக்கு கடந்த 2 நாள்களாக விளைபொருள்களுக்கான பணத்தை பட்டுவாடா செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் உடனடியாக பணப்பட்டுவாடா செய்ய வேண்டும், உளுந்துக்கு நியாயமான விலை வழங்க வேண்டும், உளுந்தை மாற்றுவதற்கு சாக்கு வழங்க வேண்டும், தானியங்களை கொள்முதல் செய்வதற்கு வெளியூர் வியாபாரிகளையும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் எதிரே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
 தகவலறிந்து உளுந்தூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பாலமுரளி மற்றும் போலீஸார் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர். இந்த மறியலால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
 செஞ்சியிலும்...: செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தின் முன் விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 விழுப்புரம் மாவட்டத்தில் அதிக அளவில் நெல் கொள் முதல் செய்யும் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடமும் ஒன்று. இங்கு நெல் மூட்டைகள் குறைந்த விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதாகவும் பணமும் குறிப்பிட்ட நாளில் பட்டுவாடா செய்வதில்லை என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
 இந்த நிலையில், புதன்கிழமை விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். ஆனால், சாக்குப் பை மாற்றும் தொழிலாளர்கள், கூலி உயர்வு கேட்டு விவசாயிகளின் சாக்குப் பையை வியாபாரிகளின் சாக்கு பைக்கு மாற்ற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புதன்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த செஞ்சி போலீஸார் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com