அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை அழைத்து மாவட்ட நிர்வாகம் கூட்டம் நடத்த வலியுறுத்தல்

தமிழக அரசு அறிவுரைப்படி அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை அழைத்து கூட்டுக்குழுக் கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் வலியுறுத்தியது. 

தமிழக அரசு அறிவுரைப்படி அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை அழைத்து கூட்டுக்குழுக் கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு
 வருவாய் அலுவலர் சங்கம் வலியுறுத்தியது.
 தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க வட்டப் பேரவை மற்றும் புதிய உறுப்பினர்கள் இணையும் விழா விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆதிசக்திசிவகுமரிமன்னன் தலைமை வகித்தார். மத்திய செயற்குழு உறுப்பினர் இரா.பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் எஸ்.கணேஷ், மாவட்டப் பொருளாளர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் சோமசுந்தரம் சிறப்புரையாற்றினார்.
 கூட்டத்தில், புதிய வட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வட்டத் தலைவராக தணிகாசலம், செயலர் முருகன், பொருளாளர் வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், பிரசாந்த் ஆகியோர் தேர்வாகினர்.
 விழாவில், தமிழ்மாநில வருவாய் அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலர் சங்கரலிங்கம் தலைமையிலும், நேரடி நியமன உதவியாளர் சங்கத்தினர், சுந்தர், செல்வக்குமார், விமல், சிலம்பரசன் ஆகியோர் தலைமையிலும் 100 உறுப்பினர்கள், தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தில் இணைந்தனர்.
 தீர்மானங்கள்: பல்வேறு துறைகள், அமைப்புகளிலிருந்து தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தில் இணைத்துக்கொண்ட உறுப்பினர்களை சங்கம் வரவேற்கிறது, வருவாய்த் துறையில் பணியாற்றும் பல்வேறு அமைப்பினர்களை பிரித்துப் பார்க்காமல், ஒரே துறை அலுவலர்களாக நினைத்து அவர்களுக்கான உரிமைகளை பெற்றுத்தர ஒருங்கிணைந்து செயல்படுவது, வட்டப் பேரவையில், விழுப்புரம் வட்டக் கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதை பேரவை அங்கீகரிக்கிறது, விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துத் துறை நிலைகளிலும் உள்ளோர் பணி மூப்பு பட்டியலை உரிய நாள்களில் வெளியிட வேண்டும், மார்ச் 15-இல் உதவியாளர் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும், தமிழக அரசு அறிவுரைப்படி கோட்ட, மாவட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை அழைத்து கூட்டுக்குழு கூட்டம் நடத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com