கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனை தொடக்கம்: 2 வாங்கினால் ஒன்று இலவசம் 

விழுப்புரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சிறப்பு விற்பனை தொடங்கியது.

விழுப்புரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சிறப்பு விற்பனை தொடங்கியது.
 தமிழகத்தின் கைத்தறி நெசவாளர் சங்கங்களின் தாய்ச் சங்கமான கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், கடலூர் மண்டலத்தில் விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்கள், புதுவையும் சேர்த்து 18 விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது. இந்த கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் நிகழ் ஆண்டு சிறப்பு விற்பனையைத் தொடங்கியுள்ளது.
 துணி ரகங்கள் "இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்' என்ற சிறப்பு விற்பனைத் திட்டம் கடந்த பிப்.19-ஆம் தேதி தொடங்கப்பட்டு, மார்ச் 31-வரை நடைபெறுகிறது.
 விழுப்புரம் எம்.ஜி. சாலையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் முதன்மை விற்பனை நிலையத்தில், இந்த சிறப்பு விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.
 விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் எம்.வனிதாமணி சிறப்பு விற்பனையைத் திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடக்கி வைத்தார். கடலூர் மண்டல கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மேலாளர் அ.கோபால் வரவேற்றார். நிறுவன ஊழியர்கள், பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
 ஆண்டு தோறும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் புதிய துணி ரகங்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.
 நிகழ் ஆண்டும் புதிய வரவுகளாக சேலம் பட்டுப்புடவைகள், மென்பட்டுப்புடவைகள், ஆர்கானிக் காட்டன் சேலைகள், குர்த்தீஸ், லினன் காட்டன் சட்டைகள், குல்ட் மெத்தை விரிப்புகள், போம் டெக்ஸ்டைல் துண்டுகள், அச்சிட்ட மீரட் மற்றும் ஜெய்ப்பூர் போர்வைகள் புதிதாக வந்துள்ளன. மேலும், பல்வேறு புடவைகள், சட்டைகள், பெட்ஷீட்டுகள், சுடிதார், வேட்டிகள் உள்ளிட்ட பல்வகை துணி ரகங்கள் 20 முதல் 60 சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com