திருக்கோவிலூர் அருகே வீடு புகுந்து தாக்குதல்: பள்ளி மாணவர் சாவு

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே புதன்கிழமை நள்ளிரவு வீடு புகுந்து மர்ம நபர்கள் தாக்கியதில் 4ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். தாய், மகள் காயமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே புதன்கிழமை நள்ளிரவு வீடு புகுந்து மர்ம நபர்கள் தாக்கியதில் 4ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். தாய், மகள் காயமடைந்தனர்.
 திருக்கோவிலூரை அடுத்த வெள்ளம்புத்தூரைச் சேர்ந்தவர் ஏழுமலை. இறந்து 4 ஆண்டுகள் ஆகிறது. இவரது மனைவி ஆராயி(45). கூலித் தொழிலாளி. இவர்களுக்கு பாண்டியன்(25), சரத்குமார் (22), விஜயகுமார்(19), தமயன்(9) ஆகிய 4 மகன்களும், அஞ்சுலட்சுமி(17), தனம்(15) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இவர்களில் பாண்டியன், சரத்குமார், விஜயகுமார் ஆகியோர் பெங்களூரிலும் அஞ்சலட்சுமி திருப்பூரிலும் பணிபுரிகின்றனர்.
 ஆராயி வெள்ளம்புத்தூரில் மகள் தனம், மகன் தமயன் ஆகியோருடன் வசிக்கிறார். தனம் தேவனூரில் உள்ள பள்ளி ஒன்றில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தமயன் வெள்ளம்புத்தூரில் உள்ள பள்ளி ஒன்றில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
 புதன்கிழமை நள்ளிரவு ஆராயி, தனம், தமயன் ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து, ஆராயி உள்ளிட்ட 3 பேரையும் கடுமையாக தாக்கினர். இதில், தமயன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ஆராயி, தனம் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். வியாழக்கிழமை அதிகாலை அக்கம்பக்கத்தினர் ஆராயி, தனம் ஆகியோரை மீட்டு, திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக அவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தமயன் சடலத்தை கைப்பற்றிய அரகண்டநல்லூர் போலீஸார், இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ஆலடியான்(45) என்பவரை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com