போலீஸார் - பொது மக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள்

ஆரோவில் அருகே உள்ள குயிலாப்பாளையம் கிராமத்தில், பொது மக்கள்-போலீஸார் இடையே நல்லுறவினை ஏற்படுத்தும் விதத்தில், பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

ஆரோவில் அருகே உள்ள குயிலாப்பாளையம் கிராமத்தில், பொது மக்கள்-போலீஸார் இடையே நல்லுறவினை ஏற்படுத்தும் விதத்தில், பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடத்தப்பட்டது. கோட்டக்குப்பம் உட்கோட்ட காவல் துறை சார்பில் நியுகிரியேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியை துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தொடக்கி வைத்தார்.
இளைஞர்களுக்கான கைப்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து, குண்டு எறிதல், தவளைப் போட்டிகளும், இரு பிரிவினருக்குமான ஓட்டப் போட்டிகள், கபடி, கோ-கோ உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன.
இந்தப் போட்டிகளில், குயிலாப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள், போலீஸார், உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள், மகளிர் போலீஸார், பெண்கள் உள்ளிட்டோர் குடும்பத்துடன் பங்கேற்று ஆர்வமாக விளையாடினர்.
விளையாட்டுப் போட்டிகளின் நிறைவாக நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை டிஎஸ்பி வழங்கி னார் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com