மதநல்லிணக்கப் பொங்கல் விழா

விழுப்புரத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், மதநல்லிணக்கப் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழுப்புரத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், மதநல்லிணக்கப் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பழைய பேருந்து நிலையத்தில் சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் நடைபெற்ற விழாவுக்கு, வட்டத் தலைவர் எஸ்.அப்துல்ஹமீது தலைமை வகித்தார். நலக்குழுவின் புரவலர் சி.பிரான்சிஸ்ஜோசப்அகர்வாலா, ஏ.முகமதுஅலி, அன்புநாதன், தாஜ்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டச் செயலாளர் போ.சிவலிங்கம் வரவேற்றார். விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெ.சங்கர் விழாவைத் தொடங்கி வைத்துப் பேசினார். மக்கள் நல்லிணக்கக்குழுவின் தலைவர் முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தி, சாந்தி நிலையம் வி.அந்தோணி குரூஸ், குழுவின் மாவட்டத் தலைவர் ஐ.ஆலாவுதீன், மாவட்டச் செயலர் வி.ராதாகிருஷ்ணன், பொருளாளர் காபிரியேல், காணை முத்தவல்லி அமீர்அப்பாஸ், வானூர் ஹலீல்பயாஸ், டிஇஎல்சி பள்ளி நிர்வாகி வில்பிரிட்டேனியல், உலக தமிழர் கழகம் த.பாலு, லுக்மான் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என கூட்டாக சேர்ந்து பொங்கல் வைத்து, வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர். தொடர்ந்து சர்க்கரைப் பொங்கலை பழைய பேருந்து நிலையம் வழியாக வந்த பொது மக்களுக்கு வழங்கி பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com