மெக்கானிக் கொலை வழக்கில் 3 பேர் கைது

திண்டிவனம் அருகே மெக்கானிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வெள்ளிமேடுபேட்டை போலீஸார் மூன்று பேரை வியாழக்கிழமை கைது செய்தனர்.

திண்டிவனம் அருகே மெக்கானிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வெள்ளிமேடுபேட்டை போலீஸார் மூன்று பேரை வியாழக்கிழமை கைது செய்தனர்.
 கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி வெள்ளிமேடுபேட்டை காவல் எல்லைக்கு உள்பட்ட புலியனூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
 இது குறித்து வெள்ளிமேடுபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். எதிரிகளைப் பிடிக்க மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
 இந்த நிலையில், புலியனூர் கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன் மகன் ராஜி என்பவர் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
 அதில் அவர், தானும், தனது அண்ணன் சுரேஷ், புலியனூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் நந்தன், சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த கபிர்தாஸ் மகன் கணேஷ்வரன் மற்றும் அவரது நண்பர் ஒருவரும் சேர்ந்து, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த மதுராந்தகத்தைச் சேர்ந்த மெக்கானிக்கான முனுசாமி மகன் பாலாஜி என்கிற ஜெயபாலன் என்பவரை போளூரில் இருந்து காரில் கடத்தி வந்து புலியனூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் வைத்து கொலை செய்துவிட்டோம் எனத் தெரிவித்தார்.
 மெக்கானிக் பாலாஜி தான் தங்கியிருந்த போளூர் பகுதியில் வீட்டின் அருகே இருந்த பெண்களிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், அதனால் கோபமடைந்த கணேஷ்வரன் கொடுத்த திட்டப்படி இந்தக் நடந்ததாகத் தெரிகிறது.
 இதையடுத்து, வெள்ளிமேடுபேட்டை போலீஸார் சுரேஷ், ராஜி, நந்தன் ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்தனர். கணேஷ்வரன் மற்றும் அவரது நண்பர் ஒருவரை தேடி வருகின்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com