தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி விழா

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி கலை விழா இசைக் கல்லூரி கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி கலை விழா இசைக் கல்லூரி கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 இ.எஸ்.மியூசிக் அகாதெமி மாணவர்களின் நடனத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. கல்லூரித் தாளாளர் ஏ.சாமிக்கண்ணு தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஏ.அருணாகுமாரி வரவேற்றார். இ.எஸ். கல்விக் குழுமப் பதிவாளர் கஸ்தூரிபாய் தனசேகரன் பங்கேற்று, பெண் கல்வியின் முக்கியத்துவம், அதற்கு இந்தக் கல்லூரி அளித்து வரும் பங்கு குறித்து நோக்க உரையாற்றினார். கல்லூரிச் செயலர் செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
 சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் கவிதா பங்கேற்று பேசியதாவது: வளமான சமுதாயத்துக்கு மாணவிகளுக்கு தரமான கல்வி அமைய வேண்டும். மாணவிகள் தெளிவாகவும், இலக்கை நோக்கியும் பயிற்சி பெற்று, தயக்கம், அச்சமின்றி செயல்பட வேண்டும். பெண்களுக்கு திடமான மனது வேண்டும். பலதுறைகளில் பெண்கள் சாதித்து வருகின்றனர். பெற்றோர்கள் பாகுபாடின்றி தங்கள் பிள்ளைகளுக்கு தகுந்த கல்விச்சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்.
 தொடர்ந்து, முதலாமாண்டு கல்லூரி மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. விழாவில், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். கல்விக் குழுமத்தின் துணைப் பதிவாளர் செüந்தரராஜன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com