கார்களில் கடத்தப்பட்ட1,200 மதுப் புட்டிகள் பறிமுதல்: மூவர் கைது 

விழுப்புரம் அருகே புதுச்சேரியிலிருந்து கார்களில் கடத்தி வரப்பட்ட 1,200 மதுப்புட்டிகளை செவ்வாய்க்கிழமை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் அருகே புதுச்சேரியிலிருந்து கார்களில் கடத்தி வரப்பட்ட 1,200 மதுப்புட்டிகளை செவ்வாய்க்கிழமை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
 விழுப்புரம் அருகே வளவனூரை அடுத்து கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக புதுச்சேரியிலிருந்து வந்த சொகுசு காரை மடக்கி சோதனையிட்டனர்.
 காரில், 1,068 புதுச்சேரி மதுப்புட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து காரில் இருந்த நபரிடம் விசாரித்ததில், அவர் வடக்கரைதாழனூரைச் சேர்ந்த பழனி மகன் சுந்தரமூர்த்தி(28) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, மதுப் புட்டிகளுடன் காரை பறிமுதல் செய்து, விழுப்புரம் மதுவிலக்கு போலீஸில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக மதுவிலக்கு போலீஸார் சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுப்புட்டிகளின் மதிப்பு ரூ.1.25 லட்சம்.
 கிராமங்கள் வழியாக கடத்த முயற்சி: புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நகருக்குள் வராமல், கிராமங்கள் வழியாக மது கடத்தப்படுவதாக மதுவிலக்குப் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. இந்தநிலையில் பிற்பகல் ஒரு மணி அளவில் விழுப்புரம் அருகே கண்டமானடியில் உள்ள ரயில்வே கடவுப்பாதை வழியாக வந்த ஒரு சொகுசு காரை மடக்கி போலீஸார் சோதனையிட்டனர். அந்த காரில் 132 மதுப் புட்டிகள் இருந்தன. காரில் இருந்த 18 வயதுக்குள்பட்ட இருவரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து மதுப் புட்டிகள், காரை பறிமுதல் செய்து விழுப்புரம் மதுவிலக்கு போலீஸில் ஒப்படைத்தனர். இதுகுறித்து இருவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுப்புட்டிகளின் மதிப்பு சுமார் ரூ.15 ஆயிரம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com