இலங்கையில் தமிழீழம் அமைய உலக நாடுகள் உதவ வேண்டும்

இலங்கையில் தமிழீழம் அமைய உலக நாடுகள் உதவ வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தலைவர் தி.வேல்முருகன் கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் தமிழீழம் அமைய உலக நாடுகள் உதவ வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தலைவர் தி.வேல்முருகன் கேட்டுக்கொண்டார்.
விழுப்புரம் மத்திய மாவட்ட தவாக சார்பில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சித் 
திடலில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில், இலங்கையில் நடைபெற்ற போரின்போது, முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நினைவேந்தல் ஜோதி ஏற்றப்பட்டது. அப்போது, பொதுகூட்டத்தில் பங்கேற்ற கட்சியினரும், பொதுமக்களும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, கூட்டத்தில் தி.வேல்முருகன் பேசியதாவது: கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இதே நாளில்தான் தமிழர் இன அழிப்பு நடந்தேறியது. உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகள், பாஸ்பரஸ் குண்டுகள், ஏவுகணைகள் ஆகியவை பொதுமக்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மீது வீசப்பட்டன. இந்தத் தாக்குதலில் 1.50 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். அப்போது நம்மை ஆண்ட அரசுகள் இந்தச் சம்பவத்தை வேடிக்கை பார்த்தன. தமிழர்களாகிய நாம் அப்போது போராட்டத்துக்காக வீதிக்கு வந்திருந்தாலே அந்த இன அழிப்பைத் தடுத்திருக்கலாம். தற்போது, அங்கு தமிழ் மக்கள் வேலைவாய்ப்பு, அடிப்படை வசதி இல்லாமலும், கல்வி கிடைக்காமலும் வாழ்கிறார்கள். உலக நாடுகள் அவர்களுக்கு அமைதி வழியில் பொது வாக்கெடுப்பு மூலமாக தமிழீழ அரசை அமைத்துத் தர வேண்டும் என்றார் தி.வேல்முருகன். 
கூட்டத்தில், மத்திய மாவட்டச் செயலர் எம்.ஆர்.குமரன், ஒன்றியச் செயலர்கள் அய்யனார், பிரகாஷ், கிருஷ்ணமூர்த்தி, சக்கரபாணி, ஏழுமலை, ஜெகதீசன், ஜீவா, மோகன், தலைமை நிலையச் செயலர் கனல் கண்ணன், மாநில தலைமை செய்தித் தொடர்பாளர் குபேந்திர குணபாலன், மாநில தொழில் சங்க பொதுச் செயலர் ஜம்புலிங்கம், மாநில தொழில்சங்கத் தலைவர் சிவராமன், பொருளாளர் பன்னீர்செல்வம், தென்மண்டல தமிழர்படை செயலர் முருகானந்தம், மாநில இளைஞர் அணி துணைச் செயலர் கல்லிப்பட்டு ஆறுமுகம், மாவட்டச் செயலர்கள் மணிகண்டன், ராமானுஜம், ராஜேஷ், ராமச்சந்திரன், மாவட்டத் தலைவர்கள் திராவிடநாகு, மணிகண்டன், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com