விழுப்புரத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்

விழுப்புரத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

விழுப்புரத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) 94-ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு ஆகியவற்றை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஊர்வலத்தை, புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடலில் இருந்து விழுப்புரம் ரோட்டரி சங்க நிர்வாகி ஆறுமுகம் தொடக்கி வைத்தார்.  
பேரணி திருச்சி சாலை, பெருந்திட்ட வளாக நுழைவாயில் வரை சென்று, மீண்டும் திருச்சி சாலை சுதாகர் நகர், கணபதி நகர், நாராயண நகர், கே.கே. சாலை, நேரு சாலை வழியாக பழைய பேருந்து நிலையத்தை அடைந்தது.
 வழக்குரைஞர் சந்திரமௌலி, ஆர்எஸ்எஸ் இந்து தர்ம விழிப்புணர்வு அமைப்பின் வட தமிழக அமைப்பாளர் சரவணன், வட தமிழகச் செயலாளர் ஜகதீசன், 
ஆர்.எஸ்.எஸ். விழுப்புரம் மாவட்டச் செயலாளர் அர்ஜுனன், ஆர்.எஸ்.எஸ். புதுவை கோட்டத் தலைவர் செல்வராஜ், பாஜக விழுப்புரம் மாவட்டப் பொதுச் செயலாளர் சுகுமார், மாவட்டத் தலைவர் விநாயகம், பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினர் சிவ தியாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  
பேண்டு வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கருப்பு நிற தொப்பி, வெள்ளை நிற மேல் சட்டை, காக்கி நிற பேன்ட், கருப்பு நிற காலணி அணிந்து மிடுக்குடன் நடைபோட்டு வந்தனர்.
தொடர்ந்து, விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் ஆர்.எஸ்.எஸ். பொது நிகழ்ச்சி என்ற பெயரில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. வழக்குரைஞர் சந்திரமௌலி தலைமை வகித்தார். 
கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் இந்து தர்ம விழிப்புணர்வு அமைப்பின் வட தமிழக அமைப்பாளர் சரவணன் பேசியதாவது: 
உலக அளவில் அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு பாரதம். இளைஞர்கள் அனைவரும் சுவாமி விவேகானந்தர், நேதாஜி, கப்பலோட்டிய தமிழன், சுப்பிரமணிய சிவா போன்றவர்களை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்
என்றார்.ற

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com