காப்புக்காட்டை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட தனியார் பேருந்து நிறுத்தத்தை அகற்ற வனத்துறை தீவிரம்

நடுவீரப்பட்டு காப்புக்காட்டை ஆக்கிரமித்து தனியார் கல்வி நிலையத்தின் சார்பில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தை அகற்ற ஸ்ரீபெரும்புதூர் வனத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
காப்புக்காட்டை ஆக்கிரமிப்பு செய்து தனியார் கல்வி நிறுவத்தால்  கட்டப்பட்ட பேருந்து நிறுத்தம். 
காப்புக்காட்டை ஆக்கிரமிப்பு செய்து தனியார் கல்வி நிறுவத்தால்  கட்டப்பட்ட பேருந்து நிறுத்தம். 


நடுவீரப்பட்டு காப்புக்காட்டை ஆக்கிரமித்து தனியார் கல்வி நிலையத்தின் சார்பில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தை அகற்ற ஸ்ரீபெரும்புதூர் வனத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட நடுவீரப்பட்டு பகுதியில் பலநூறு ஏக்கர் பரப்பளவில் காப்புக்காடு உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் வனச்சரக அலுவலக வரம்புக்குபட்ட இந்த காப்புக்காட்டில் வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன. 
இந்தக் காட்டுக்கு அருகில் தனியார் ஒருவரின் கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்வி நிலையத்தின் சார்பில், தாம்பரம்-சோமங்கலம் சாலையில் காப்புக்காட்டை ஆக்கிரமிப்பு செய்து, கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களின் வசதிக்காக பேருந்து நிறுத்தக் கட்டடம் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காப்புக்காட்டில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வனத் துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், காப்புக்காட்டில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் வனத்துறை சார்பில், அந்தக் கல்வி நிலையத்துக்கு கடந்த ஆறு மாதங்களாக மூன்று முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. எனினும், ஆக்கிரமிப்புகளை அகற்ற அந்த நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, ஆக்கிரமித்து கட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தை இடித்து அகற்ற ஸ்ரீபெரும்புதூர் வனவர் செல்வகுமார் தலைமையிலான வனத் துறையினர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் புதன்கிழமை அங்கு சென்றனர். அப்போது, அந்த இடத்துக்கு வந்த அக்கல்வி கல்வி நிறுவன ஊழியர்களும், உள்ளூர் பிரமுகர்களும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தை அதிகாரிகள் அகற்றவில்லை.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் வனவர் செல்வகுமார் கூறுகையில், காப்புக்காட்டை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டக் கூடாது என்று விதி உள்ளது. அந்த விதியை மீறி பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது. அது கட்டப்பட்டது குறித்து அந்தக் கல்வி நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளோம். ஆக்கிரத்து கட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தை அகற்ற நாங்கள் சென்றபோது, கல்லூரி நிர்வாகமும், உள்ளூர் பிரமுகர்களும் எதிரிப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில தினங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com