தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வங்கக் கடலில் ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய கன மழை, கடல் சீற்றத்தால் மாமல்லபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இருப்பினும், மழையையும், கடல் சீற்றத்
காஞ்சிபுரம், மேட்டுத் தெரு சந்திப்பில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீர்
காஞ்சிபுரம், மேட்டுத் தெரு சந்திப்பில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீர்


வங்கக் கடலில் ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய கன மழை, கடல் சீற்றத்தால் மாமல்லபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இருப்பினும், மழையையும், கடல் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள கடற்கரை, சிற்பங்களை கண்டு ரசித்தனர். 
கடந்த இரு நாள்களாக தொடர்ந்து காற்றுடன், பலத்த மழை பெய்து வருகிறது. எனினும் மாமல்லபுரத்துக்கு வந்துள்ள உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் புதன்கிழமை கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடி கடற்கரை, அங்குள்ள சிற்பங்களை கண்டு ரசித்தனர். 
செங்கல்பட்டு, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, திருக்கழுகுன்றம், திருப்போரூர், கல்பாக்கம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருக்கழுகுன்றத்தில்40 மி.மீ. மழை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக திருக்கழுகுன்றத்தில் 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வங்கக் கடலில் மீண்டும் புயல் சின்னம் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலின் போது காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன்கூடிய கனமழை பெய்தது. இதையடுத்து, கடந்த 2 நாள்களாக பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டப் பகுதிகளான செங்கல்பட்டு, திருப்போரூர், காஞ்சிபுரம், திருக்கழுகுன்றம், மாமல்லபுரம், செய்யூர், உத்தரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அத்துடன், நீர்வரத்துக் கால்வாய்களில் மழைநீர் வரத்து தொடங்கியுள்ளது. 
ஒரே நாளில் அதிகபட்சமாக திருக்கழுகுன்றத்தில் மட்டும் 40 மி.மீ. மழை பதிவானது. 
பிற இடங்களில் மழையளவு: மாமல்லபுரம் -34 மி.மீ., திருப்போரூர்- 33 மி.மீ., மதுராந்தகம் -19 மி.மீ., செங்கல்பட்டு -19 மி.மீ., காஞ்சிபுரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் -9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
திருத்தணியில்...
திருத்தணி நகரில் பெய்துவரும் தொடர் மழையால் அத்தியாவசியப் பொருள்களை வாங்கக்கூட வெளியே செல்ல முடியாமல் நகர மக்களின் இயல்பு வாழ்க்கை புதன்கிழமை பாதிக்கப்பட்டது.
தமிழக கடலோர பகுதிகளில் வலுவான காற்றழுத்த தாழ்வு நிலவுவதாலும், கனமழை காரணமாகவும் திருத்தணியில் புதன்கிழமை காலை முதலே லேசான மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் காலை 10 மணிக்கு மேல் தொடங்கிய மழை இரவு வரை விட்டு விட்டு தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழையால் நகரவாசிகள் தங்களுடைய அத்தியாவசிய பொருள்களைக் கூட வாங்க முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். 
இந்த மழையால் திருத்தணி நகரில் உள்ள ம.பொ.சி. சாலை, அரக்கோணம் சாலை, பேருந்து நிலையம், சித்தூர் சாலை, பைபாஸ் சாலை ஆகிய இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. 
அதேபோல் மழை பரவலாக பெய்து வருவதால் திருத்தணி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக குறைவாகவே காணப்பட்டது. இந்த மழையால் திருத்தணி, பள்ளிப்பட்டு தாலுக்கா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com