மோடி பிறந்த நாள்: காமாட்சியம்மன் கோயிலில் பாஜகவினர் வழிபாடு

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி காமாட்சியம்மன் கோயிலில் பாஜகவினர் வழிபட்டனர்.
மோடி பிறந்த நாள்: காமாட்சியம்மன் கோயிலில் பாஜகவினர் வழிபாடு


பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி காமாட்சியம்மன் கோயிலில் பாஜகவினர் வழிபட்டனர்.
பிரதமர் மோடியின் 68ஆவது பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளில் பாஜகவினர் வழிபாடு, நலத்திட்ட உதவிகள், இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். அதன்படி, பாஜக மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் பெருமாள் தலைமையில் காமாட்சியம்மன் கோயிலில் சங்கல்ப பூஜை செய்தனர். அதைத் தொடர்ந்து, கோயிலின் உட்புற வளாகத்தில் தங்கத் தேரை இழுத்து வழிபட்டனர். 
இதனிடையே, பாஜக பொதுக்குழு உறுப்பினர் ராஜவேலு தலைமையில் உத்திரமேரூர் அரசு பொது மருத்துவனை வளாகத்தில் அந்தப் பேரூராட்சியின் ஊழியர்களுடன் இணைந்து பாஜகவினர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com