கிராமப்புற விவசாயிகளுக்கு  அறிவியல் விழிப்புணர்வு பயிலரங்கம்

சங்கரா கலை அறிவியல் கல்லூரியில் கிராமப்புற விவசாயிகளுக்காக நடைபெற்ற 2 நாள் பயிலரங்கம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.
கிராமப்புற விவசாயிகளுக்கு  அறிவியல் விழிப்புணர்வு பயிலரங்கம்


சங்கரா கலை அறிவியல் கல்லூரியில் கிராமப்புற விவசாயிகளுக்காக நடைபெற்ற 2 நாள் பயிலரங்கம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.
தமிழ்நாடு அறிவியில் தொழில்நுட்பம் மாநில மன்றம், சங்கரா கலை அறிவியில் கல்லூரி ஆகியவை சார்பில் கிராமப்புற விவசாயிகளுக்கான அறிவியல் அறிவாற்றல் விழிப்புணர்வுப் பயிலரங்கம் பிப்.13, 14 -ஆம் தேதிகளில் நடைபெற்றது. பயிலரங்கத்துக்கு, கல்லூரி முதல்வர் ராம.வெங்கடேசன் தலைமை வகித்தார். 
சிறப்பு விருந்தினராக வேளாண் இணை இயக்குநர் கோல்டி பிரேமாவதி, மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்ட வேளாண் துணை இயக்குநர் சாந்தி, வேளாண் பொறியாளர் பிரிட்டோ ஜான், மரம் வளர்ப்போர் சங்க நிறுவனர் மரம் மாசிலாமணி உள்ளிட்டோர்  கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில், கோடைகாலத்தில் நீர் மேலாண்மை, இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள், நிலத்தடி நீர் சிக்கனம், மண்வகைகள், பாசன அளவை முடிவு செய்பவை, தாவர வகை மண் வகைக்கு ஏற்ப நீர் பூமிக்குள் இறக்கும் அளவு, மண் வரப்பு அமைத்தல், நீர்வடிப்பகுதி திட்ட செயல்பாடுகள், நுண்ணீர்ப் பாசன மானியம், நீர்த்தேக்கத் தொட்டிகள் வழங்குதல், மானாவாரி நிலங்களில் வரப்பு அமைத்தல், பண்ணைக் குட்டை அமைத்தல், உறை கிணறு, நத்தை அகற்றுதல், மரங்கள் வளர்த்தல், செம்மண் நிலங்களில் வட்டா பாத்தி, நீர்ப்பாசனக் கருவிகள் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 
இந்தப் பயிலரங்கில் திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர். உயிரி தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் ரமேஷ் நன்றி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com