மினி லாரியில் தீ விபத்து

தாம்பரத்தை அடுத்த எருமையூர் பகுதியில் சாலையில் சென்ற மினி லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மிக்ஸி ஜார்கள் தீயில் சேதமடைந்தன.


தாம்பரத்தை அடுத்த எருமையூர் பகுதியில் சாலையில் சென்ற மினி லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மிக்ஸி ஜார்கள் தீயில் சேதமடைந்தன.
திருமழிசை சிப்காட் பகுதியில் மிக்ஸி ஜார்கள் உற்பத்தி செய்யும் சரவணா ஃபேப்ரிகேஷன் என்ற தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 3,126 மிக்ஸி ஜார்களை ஏற்றிக் கொண்டு ஒரு மினி லாரி வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்றுகொண்டிருந்தது. 
எருமையூர் பகுதியில் வந்தபோது மினி லாரியில் தீப்பிடித்தது. இதையடுத்து, ஓட்டுநர் சுந்தர் மற்றும் உதவியாளர் கனிராம் ராணா ஆகியோர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மினி லாரியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். எனினும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மிக்ஸி ஜார்கள் தீயில்  சேதமடைந்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com