5 கிராமங்களுக்கு சூரிய மின்சக்தி விளக்குகள்

செங்காடு பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை சார்பில் 5 கிராமங்களில் அமைக்கப்பட்ட 101 சூரிய மின்விளக்குகளை பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
5 கிராமங்களுக்கு சூரிய மின்சக்தி விளக்குகள்


செங்காடு பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை சார்பில் 5 கிராமங்களில் அமைக்கப்பட்ட 101 சூரிய மின்விளக்குகளை பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செங்காடு பகுதியில் கார் உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் ஹுன்டாய் ஸ்டீல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பாக ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் மேவளூர்குப்பம், வளர்புரம், மண்ணூர், செங்காடு, கிளாய் ஆகிய 5 கிராமங்களில் 101 சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. இதேபோல் கிளாய் ஊராட்சியில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிக்கு ரூ.16 லட்சம் நிதி வழங்கப்பட்டு, ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீர்த் தொட்டி, கழிப்பறை வசதி, பள்ளிக் கட்டட  மேற்கூரை சீரமைத்தல், சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று நிறைவடைந்தன. 
இதையடுத்து, சீரமைக்கப்பட்ட பள்ளி வளாகம் மற்றும் சோலார் மின்விளக்குளை பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்ச்சி கிளாய் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஹுன்டாய் ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாங் சுக்சி பங்கேற்று,  ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சீதா.சீனிவாசன் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் மதிவாணன் ஆகியோரிடம் பணிநிறைவுக்கான ஒப்புகைச் சீட்டை வழங்கினார். இதில், கிளாய் அதிமுக நிர்வாகி வாசு, பள்ளி தலைமையாசிரியர் துரைவேலு, கொரிய நாட்டு தன்னார்வத் தொண்டு மாணவர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com