கூட்டணிக் கட்சியினரிடம் ஆதரவு திரட்டிய பாமக வேட்பாளர்

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் வைத்தியலிங்கம் செவ்வாய்க்கிழமை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.  
கூட்டணிக் கட்சியினரிடம் ஆதரவு திரட்டிய பாமக வேட்பாளர்


ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் வைத்தியலிங்கம் செவ்வாய்க்கிழமை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.  
 மக்களவைத் தேர்தலில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியானது, அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக சார்பில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் மருத்துவர் அ.வைத்தியலிங்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பாமக வேட்பாளர் வைத்தியலிங்கம் செவ்வாய்க்கிழமை  ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மாங்காடு, குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிகளில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இதில், மாவட்ட அதிமுக செயலர் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி, புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.பி.சி.தணசேகரன், தேமுதிக மாவட்டச் செயலர் அனகை டி.முருகேசன், பாஜக மாவட்டப் பொறுப்பாளர் பாபு கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர், சுங்குவார்சத்திரத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு  பாமக வேட்பாளர் வைத்தியலிங்கம் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com