170 பயனாளிகளுக்கு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு ஒதுக்கீடு

கோவை மலைநகர் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளில் 170 பயனாளிகளுக்கு

கோவை மலைநகர் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளில் 170 பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கான உத்தரவை  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். 
 கோவை, பாலக்காடு சாலை, காயிதே மில்லத் நகர், முத்தண்ணன் குளம் தெற்குப் பகுதி, ஆர்.எஸ்.புரம் மேதவர் காலனி, செல்வபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்புகள் அண்மையில் அகற்றப்பட்டன. 
 அப்பகுதியில் வசித்து வந்தவர்களுக்கு மலைநகர், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 
 கோவைப்புதூர் அண்ணாநகர், மலை நகர் பகுதிகளில் உள்ள சமுதாயக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் அப்பகுதிகளில் ஏற்கெனவே ஒதுக்கீடு பெற்ற 148 பயனாளிகள் குடியிருப்புக்கு செலுத்திய ரூ. 44 லட்சத்து 75 ஆயிரம் முன்பணத்துக்கான காசோலையையும், புதிய ஒதுக்கீடு பெற்ற 170 பயனாளிகளுக்க ஒதுக்கீடு உத்தரவையும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினர்.
அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது: அண்ணாநகர் பகுதியில் சாலை, குடிநீர், மின் விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியில் இருந்து காந்திபுரம், கணபதி, வ.உ.சி. நகர் வழியாக சேரன் மாநகர் வரை பேருந்து வழித்தட வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
 இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், கிணத்துக்கடவு சட்டப் பேரவை உறுப்பினர் எட்டிமடை சண்முகம், குடிசை மாற்று வாரியக் கண்காணிப்புப் பொறியாளர் ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com