அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 57 லட்சம் மோசடி: 2 பேர் மீது வழக்கு

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 57 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 57 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகிலுள்ள சாலைப்புதூரைச் சேர்ந்தவர் குலசேகரன், முன்னாள் ராணுவ வீரரான இவர் கோவை மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். 
அதில், சென்னையைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் மூலமாக பொள்ளாச்சியைச் சேர்ந்த பெருமாள் சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு அறிமுகமானதாகவும், அப்போது, அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகளுடன் தொடர்பு உள்ளதால் நிறைய பேருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்ததாகவும்,  அதை நம்பி தனக்குத் தெரிந்த 8 பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதற்காக பெருமாளிடம் ரூ. 57 லட்சம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். 
ஆனால் அதன்பிறகு அரசு வேலை வாங்கித் தராமல் பெருமாள் மோசடி செய்துவிட்டதாகவும்,  பணத்தை திருப்பிக் கேட்டபோது கொடுக்காமல் மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக போலீஸார்  வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com