கோயில் யானைகளுக்கான புத்துணர்ச்சி முகாமை ரத்து செய்ய வலியுறுத்தல்

தேக்கம்பட்டியில் ஆண்டுதோறும் நடக்கும் கோயில் யானைகளுக்கான புத்துணச்சி முகாமை ரத்து செய்யவேண்டும்

தேக்கம்பட்டியில் ஆண்டுதோறும் நடக்கும் கோயில் யானைகளுக்கான புத்துணச்சி முகாமை ரத்து செய்யவேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க (ஜாதி, மத, கட்சி சார்பற்றது) மாநில தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 
தேக்கம்பட்டி கிராமத்தில் கடந்த சிலஆண்டுகளாக கோயில் யானைகளுக்கான புத்துணர்ச்சி முகாம் இந்து அறநிலையத் துறை சார்பில்நடத்தப்பட்டு வருகிறது. முகாம் நடைபெறும் இடத்தை ஒட்டி விளை நிலங்கள் உள்ளன. இதோடு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து காட்டு யானைகள் பவானி ஆற்றுக்கு வருவது வழக்கம். 
அவ்வாறு வரும் காட்டு யானைகள் முகாமில் உள்ள பெண் யானைகளிடம் பரவசப்பட்டு இப்பகுதியில் ஊடுருவும் முயற்சியில் ஈடுபடுகின்றன. இதனால் இப்பகுதியில் விவசாயிகள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக நடக்கும் யானைகள் புத்துணர்ச்சி முகாமை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com