சத்துணவு முறைகேடுகளைத் தடுக்க தினமும் குறுஞ்செய்தி அனுப்ப உத்தரவு

சத்துணவு முறைகேடுகளைத் தடுக்க தினமும் குருஞ்செய்தி அனுப்ப வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு

சத்துணவு முறைகேடுகளைத் தடுக்க தினமும் குருஞ்செய்தி அனுப்ப வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வால்பாறையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு )  அறிவுறுத்தியுள்ளார்.
மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சத்துணவு மையங்களில் தினமும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு குறித்த எண்ணிக்கையை குருஞ்செய்தி மூலம் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. வால்பாறையில் மொத்தம் 91 சத்துணவு மையங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான மையங்கள் எஸ்டேட் பகுதிகளில் அமைந்துள்ளதால், செல்பேசி டவர் இன்றி சேவை கிடைக்காததால் குருஞ்செய்தி அனுப்ப முடியாத நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு சத்துணவு மையங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் அழுகி இருப்பதை வால்பாறை சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வின்போது கண்டுபிடித்தனர். 
இந்நிலையில் வால்பாறை வட்டாரத்தில் உள்ள சத்துணவு மையங்களின் செயல்பாடுகள் குறித்த கூட்டம் வால்பாறை அரசு துவக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கே. ராமச்சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் தினமும் கட்டாயம் எத்தனை மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது  என்ற தகவலை குருஞ்செய்தியாக அனுப்ப வேண்டும். உணவு சமைக்க மையங்களுக்கு தரமான பொருள்கள் வருவதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். 
இந்தக் கூட்டத்தில் வால்பாறை வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com