பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பேரணி

ஊதிய உடன்பாட்டுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில்

ஊதிய உடன்பாட்டுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் நூற்றுக்கணக்கான பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் புதன்கிழமை பேரணி நடத்தினர்.
 கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் இருந்து அனைத்து ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராபர்ட் தலைமையில் ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஸ்கோர்ஸ் வரையில் பேரணியாகச் சென்றனர். 
 இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கான 3ஆவது ஊதிய உடன்பாட்டுக்கு அரசு அனுமதி வழங்குவது, ஓய்வூதியத்தில் மாற்றம் கொண்டுவருவது, 4ஜி அலைக்கற்றை பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு வழங்குவது, 2 ஆவது ஊதிய மாற்றத்தில் தீர்க்கப்படாத கோரிக்கைகளை நவம்பர் மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும்.  அவ்வாறு நிறைவேற்றவில்லை என்றால் டிசம்பர் மாதத்தில் போராட்டம் தீவிரமடையும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
 இந்தப் போராட்டத்தில் பி.எஸ்.என்.எல். அனைத்து ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன், மத்திய சங்க நிர்வாகி செம்மலர் அமுதம், ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com