மேட்டுப்பாளையத்தில் 1008 யாக குண்ட மஹா வேள்வி

மேட்டுப்பாளையத்தில் ஆனந்த வாழ்வு வேண்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் 1,008 யாக குண்டங்களுடன் மஹா வேள்வி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. 

மேட்டுப்பாளையத்தில் ஆனந்த வாழ்வு வேண்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் 1,008 யாக குண்டங்களுடன் மஹா வேள்வி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. 
ஸ்ரீ தேவி ஆஸ்ரமம்,  சர்வமங்கள தியான பீடம்,  அகத்தியர் ஞானபீடம்,  முருக பக்தர்கள் பேரவை,  வனவாசி சேவா கேந்திரம்,  சிவனடியார்கள்  மற்றும் வி. ஹெச். பி. தர்ம பிரசார் சமிதி ஆகியவை சார்பில் மேட்டுப்பாளையம் சர்வமங்களம் தியான பீடம் மைதானத்தில்  நடைபெற்ற இந்நிகழ்ச்சி நடைபெற்றது.   
 இதையொட்டி, காலை 6 மணிக்கு கோ பூஜையும், 108 ஏழைகளுக்கு வஸ்திர தானமும் வழங்கப்பட்டது. 
இதைத் தொடர்ந்து 1,008 யாக குண்டங்களுடன் மஹா வேள்வியை ஆச்சாரியர் செந்தில் குருஜி நடத்தி வைத்தார். 
இந்த நிகழ்ச்சியில்,  மன்னார்குடி ஸ்ரீ ஸ்ரீ செண்பக மன்னார் ஜீயர்  சுவாமிகள்,  வேதாந்தா ஆனந்தா  ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
இதில், டாக்டர் செந்தாமரை, சண்முகம், என்.எஸ்.வி.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com