அன்னூர் மாரியம்மன் கோயிலில் பூச்சாட்டுத் திருவிழா

அன்னூர் மாரியம்மன் கோயிலில் பூச்சாட்டுத் திருவிழா செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.


அன்னூர் மாரியம்மன் கோயிலில் பூச்சாட்டுத் திருவிழா செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.
அன்னூர் மாரியம்மன் கோயிலில் பூச்சாட்டு விழா ஏப்ரல் 9 ஆம் தேதி துவங்கியது. இதையொட்டி, தினமும் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏப்ரல் 16 ஆம் தேதி மாலை கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல் நிகழ்வு நடைபெற்றது. 17 ஆம் தேதி முதல் நாள்தோறும் அபிஷேக ஆராதனை, பூவோடு எடுத்தல், இரவு பூவோடு எடுத்தல், தீபாராதனை நடைபெற்றது.
ஏப்ரல்  22 ஆம் தேதி இரவு அணிக்கூடை எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. 23 ஆம் தேதி காலை விநாயகர் கோயிலில் இருந்து சக்தி கரகம் எடுத்தல் மற்றும் அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து  பாத விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பூவோடு எடுத்து மாரியம்மன் கோயிலுக்கு வந்தனர். 
அன்னூர் தாசபளஞ்சிக சங்கத் தலைவர் முருகேசன் தலைமையில் பெருமாள் கோயிலில் இருந்து மணமகள் அழைப்புக்காக சீர் வரிசை தட்டுகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டன.
பின்னர் மகா பூர்ணஹுதியை தொடர்ந்து தீர்த்த கலசம் சுவாமிக்கு தெளிக்கப்பட்டது. பின்னர் கோயில் அர்ச்சகர்கள் உரலில் இடிக்கப்பட்ட மஞ்சளை மாங்கல்ய கயிற்றில் பூசி மாங்கல்ய தாரணம் செய்யப்பட்டது. தொடர்ந்து மாலை மாற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. மாலை 6 மணியளவில் முக்கிய வீதிகள் வழியாக சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com