ஆற்றல் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு

கோவை கண்ணம்பாளையம், கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியின் மின்னியல்,  மின்னணுவியல் மற்றும் இயந்திர பொறியியல் துறை


கோவை கண்ணம்பாளையம், கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியின் மின்னியல்,  மின்னணுவியல் மற்றும் இயந்திர பொறியியல் துறை சார்பில் ஆற்றல் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு அண்மையில் நடந்தது. 
இதில் பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சி சங்க துணை இயக்குநர் எப்.சத்தியராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பேசியதாவது: 
இயற்கையாகக் கிடைக்கும் காற்று, சூரியஒளி ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைத்து, செயற்கை உபகரணங்களான ஏ.சி., மின் விளக்குகள் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்து உள்ளதால் எரிசக்திகளின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு சுகாதார பாதிப்புகளும் அதிகரித்துள்ளது. எரிசக்தி சேமிப்பின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளான சூரியஒளி, சி.எப்.எல்., எல்.இ.டி., விளக்குகளையும், உயிரி எரிசக்திகளை பயன்படுத்தி வளிமண்டலத்தில் கரியமில வாயுவினால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என பயிற்சி வகுப்பில் மாணவர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.  கே.ஐ.டி. கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி துணைத் தலைவர் இந்து முருகேசன், செயல் அறங்காவலர் ஏ.சூர்யா, முதல்வர் என்.மோகன்தாஸ் காந்தி மற்றும் மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com