மாநகராட்சி நிர்வாகம் முடங்கியுள்ளதால் வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு: நா.கார்த்திக் எம்.எல்.ஏ.  குற்றச்சாட்டு

கோவை மாநகராட்சி நிர்வாகம் முடங்கிப் போய் உள்ளதால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக

கோவை மாநகராட்சி நிர்வாகம் முடங்கிப் போய் உள்ளதால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக திமுக சிங்காநல்லூர் சட்டப் பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார். 
மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையர் டாக்டர் விஜயகார்த்திகேயனை, திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பூங்காக்கள் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த பூங்காக்கள் தற்போது பராமரிப்பு இல்லாமல் முட்புதர்கள் நிறைந்த  காட்சி அளிக்கிறது. இதனால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் பூங்காக்கள் உள்ளன. சூரிய ஒளி மின்கம்பங்கள் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்துள்ளதால் நகரம் முழுவதும் இருளில் மூழ்கி போய் உள்ளது. இதனால் குற்றச்சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன.
 சுகாதாரப் பணியாளர்களுக்குத் தேவையான உபகரணங்கள் இல்லாததால் பணிகள் தொய்வு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இது தொடர்பாக பல முறை மனு அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மாநகராட்சி நிர்வாகம் முடங்கியுள்ளதால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. 
 நகரம் முழுவதும் குப்பை மலைபோல் குவிந்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் துறை அமைச்சர் ஒருநாள் கூட ஆய்வுப் பணி மேற்கொள்ளவில்லை. மேலும்,  2  நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் தருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நாளிதழ்களில் தவறான தகவல் அளித்துள்ளார். ஆனால் 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. வளர்ச்சிப் பணிகள் தடைபட்டுள்ளதற்கு உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைத்ததே காரணம் என்றார்.
மாநகர் மாவட்ட பொறுப்புக் குழு உறுபினர்கள் நாச்சிமுத்து, மெட்டல் மணி, உமா மகேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் ராஜராஜேஸ்வரி, பகுதிப் பொறுப்பாளர் கோவிந்தராஜ், அணி அமைப்பாளர்கள் ரகுமான், மகளிர் அணி பொறுப்பாளர் சரஸ்வதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com