ஈரோடு வடக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு வடக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பவானியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


ஈரோடு வடக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பவானியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலர் மு.வேலுசாமி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர்கள் பொங்கலூர் பழனிசாமி, எஸ்.எல்.பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் யோகபிரபு வரவேற்றார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தமிழகத்தில் பரவலாக டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இதைத் தடுக்க சிறப்பு முகாம்கள் நடத்துவதுடன், பொது மக்களைப் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் மத்திய அரசின் நிதி கிடைக்காமல், உள்ளாட்சி நிர்வாகங்கள் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
எனவே, உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்.
பவானி, அந்தியூர் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் தொழில்சாலைகள், கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை, எளிய மக்களை பாதிக்கும் சட்ட விரோத லாட்டரி விற்பனை, சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட முன்னாள் செயலாளர் எஸ்.சி.ஆர்.கோபால், மாவட்டத் துணைச் செயலர்கள் பெ.ரா.முருகானந்தம், எம்.கதிர்வேல், நகர முன்னாள் செயலாளர் பெ.அழகப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com