கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஈரோட்டில் இருந்து ரூ.1 கோடி மதிப்பில் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பி வைப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்ட மக்களுக்கு ரூ.1.07 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் ஈரோடு மாவட்டம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்ட மக்களுக்கு ரூ.1.07 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் ஈரோடு மாவட்டம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரி சி.கதிரவன் கூறியதாவது:
கஜா புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, கடலூர், கரூர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று, கன மழையால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அரசு அமைப்புகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் முதல்கட்டமாக அரிசி, குழந்தைகளுக்கான பால் பவுடர், ரொட்டி, தண்ணீர் பாட்டில், நாப்கின், போர்வை, துண்டு, மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, பிளீட்சிங் பவுடர், மாட்டுத்தீவனம், பினாயில் உள்ளிட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்கள் லாரிகள் மூலம் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இரண்டாம்  கட்டமாக பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் , தனியார் தொண்டு நிறுவனங்கள், அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனம், ஒளிரும் ஈரோடு அமைப்பினர், சக்தி மசாலா நிறுவனம், சிறகுகள் அமைப்பு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள் சார்பில் வழங்கப்பட்டுள்ள ரூ. ரூ.57 லட்சம் மதிப்பிலான அரிசி, போர்வை, வேஷ்டி, சேலைகள், காய்கறிகள், குளுக்கோஸ்,  ரொட்டி, தண்ணீர் பாட்டில், மண்ணெண்ணெய், கொசுவர்த்தி சுருள் உள்ளி
 நிவாரணப் பொருள்கள் லாரிகள் மூலம்  பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com